சுய தொழில் வாய்ப்பு மூலிகை சாம்பிராணி வியாபாரம் செய்து தினம் தோறும் சம்பாதிக்கலாம்
இன்றைய சுயதொழில் வாய்ப்பில் கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழில் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருந்தே சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்தகுறைந்த முதலீட்டில் நிறைவான லாபமுடைய இந்த மூலிகை சாம்பிராணி தொழிலினை நீங்கள் துவங்கலாம், கெமிக்கல் அற்ற இந்த மூலிகை சாம்பிராணியை நாம் சுவாசிப்பதால் உடலுக்கும் நன்மை, சரி வாங்க இந்த மூலிகை சாம்பிராணி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
மூலிகை சாம்பிராணி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் என்ன என்ன:-
சாம்பிராணி,
அகில்,
முகில்,
கருங்காலி,
தேவதாரு,
மரமஞ்சள்
வெண்கடுகு
நாய்க்கடுகு
மருதாணி விதை,
அருகம்புல் பொடி
புணுகு
கோரோஜனை
தசாங்கு
கஸ்தூரி மஞ்சள்
பேய்மிரட்டி இலை
விஷ்ணு கிரந்தி
குப்பை மேனி
நாட்டு மா இலை
வேம்பு இலை
வேம்பு பட்டை
வேம்பு வேர்
சந்தன தூள்
வெட்டி வேர்
மட்டிப்பால்
கருந்துளசி சமூலம்
திருநீற்று பச்சிலை
தலைச்சூரி வேர்
கொட்டை கரந்தை இலை
தொட்டால் சுருங்கி வேர்
சிறியா நங்கை
ஆலங்குச்சி
அரசங்குச்சி
ஓமம்
சுக்கு
சிற்றத்தை
வில்வ இலை பொடி
வேப்ப சமூலம்
நொச்சி சமூலப்பொடி
குங்கிலியம்.
இவற்றில் நீங்கள் தேவையானவற்றை நாட்டு மருந்து கடைகளில் மொத்தமாக வாங்கி கொள்ளுங்கள் இவற்றை 5 மூலிகை 10 மூலிகை என தனிதனியாகவும் நீங்கள் தயாரிக்கலாம், அல்லது மொத்தமாகவும் சேர்க்கலாம்
மூலிகை சாம்பிராணி தயாரிப்பது எப்படி:-
மேற் கூறிய மூலிகைகள் அனைத்தையும் நன்றாக அரவை மிஷினில் பொடி செய்து பாக்கெட்டில் 50 கிராம், 100 கிராம், 250 கிராம் என பேக்கிங் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்
மேலும் இந்த காலத்திற்க்கு ஏற்ப்ப நவீன முறையில் ரெடிமேடாக கம்ப்யூட்டர் சாம்பிராணியாகவும் தயாரித்து கொள்ள்ளலாம்
கம்யூட்டர் சாம்பிராணி என்றால் அச்சு போட தனியாக இயந்திரம் வாங்க வேண்டும், மேலும் மேலும் மரத்தூள், கரித்தூள் செர்ர்த்து கொள்ள வேண்டும்
அந்த இயந்திரத்தில் சாம்பிராணி கலவைகளை கொட்டினால் அவை கம்ப்யூட்டர் சாம்பிராணியாக அச்சு அடித்து வெளிவரும்
கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி:-
தாங்கள் தயார் செய்த கம்ப்யூட்டர் சாம்பிராணி தரமாக பேக்கிங் செய்துகொள்ளுங்கள் உங்கள் மூலிகை சாம்பிராணிக்கு என்று நல்ல பெயர் வைத்து லேபிள் தயார் செய்து கொள்ளுங்கள், அடுத்து உங்கள் பகுதியில் உள்ள கடைகள் சூப்பர் மார்க்கெட் என அனைத்து கடைகளிலும் விற்பனையை துவக்குங்கள் விடா முயற்ச்சியுடன் உழைத்தால் நிச்சயம் இந்த தொழிலில் தாங்கள் வெற்றி பெற முடியும்எந்த ஒரு தொழிலையும் முறைப்படி தயாரித்து தரமானதாக விற்பனைக்கு அனுப்பினால் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க முடியும்நீங்கள் உபயோகிக்கும் மூலப்பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். இல்லேயேல் உங்கள் பொருளுக்கு மார்கெட்டில் வரவேற்பு இருக்காது. தரம் குறைந்தது என்றால் உங்களிடம் கொள்முதல் செய்ய விரும்பமாட்டார்கள்
மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்
சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்
ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!
சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு
சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்
8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு
குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் பிரவுசிங் சென்டர்கள்
சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்
சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..!
குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்
சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு
சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்
Tags: தொழில் வாய்ப்பு