Breaking News

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..!

அட்மின் மீடியா
0

சுய தொழில் பெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம்..!
 

 


 
கட்டிட அமைப்பு:
 
நீங்கள் வீட்டில் இருந்து தொழில் செய்வதாக இருந்தால் தனியாக கட்டிடம் எதும் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த இட்லி மாவு தயாரிப்பு தொழிலை ஆரம்பித்துவிடலாம். சந்தை வாய்ப்பு அதிகரிதுவிட்டால் தனியாக பத்துக்கு பத்து அளவு கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் கூட  போதுமானது
 
 
மூலப்பொருட்கள்:
 
இட்லி அரிசி, 
 
உளுந்து, 
 
வெந்தயம், 
 
உப்பு, 
 
ஜவ்வரிசி 
 
பேக்கிங் செய்ய  பாக்கெட் கவர் தேவைப்படும்
 
 
தேவையான இயந்திரம்:
 
 
ஆரம்ப கட்டத்தில் நீங்கள் சாதாணரமான கிரைண்டரில் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்யலாம். 
 
உங்கள் சந்தை வாய்ப்பு அதிகரித்து வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் போது Instant wet grinder ஒன்றை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
 
 
இட்லி மாவு தயாரிக்கும் முறை:
 
5 கிலோ இட்லி அரிசிக்கு, 
 
1 கிலோ உளுந்து, 
 
500 கிராம் ஜவ்வரிசி 
 
50கிராம் வெந்தயம்
 
 
முதலில் இட்லி அரிசியை நன்கு அலசி 2 மணிநேரம் ஊறவைக்க 
 
உளுந்து, வெந்தயம் மற்றும் ஜவ்வரிசி ஆகியவற்றை தனிதனியாக  1/2 மணி நேரம் மட்டும்  ஊறவைத்து கொள்ள வேண்டும்.
 
முதலில் அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
 
அரிசி மைபோல் அரைத்த பின்பு, உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
 
இப்பொழுது அரைத்த உளுந்து மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக   நன்றாக கலந்து கொள்ளவும். 
 
ஒரு 5கிலோ அரிசிக்கு 18 கிலோ இட்லி மாவு கிடைக்கும். ஒரு கிலோ இட்லி மாவினை ரூபாய் 45 விற்பனை செய்யலாம். 18 கிலோ மாவிற்கு 810 ரூபாய் விற்பனை செய்யலாம் அதில் 500 ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.
 
 
குறிப்பு:
 
உளுந்து ரொம்ப நேரம் ஊறக்கூடாது. இன்னும் சொல்லப் போனா, அரிசியை அரைச்சு வச்சிட்டு, அடுத்த நாள் காலைல இட்லி வேக வைக்கிறதுக்கு முன்னாடி உளுந்து அரைச்சு சேர்த்தாலே போதும். 
 
மேலும் இட்லி மிருதுவா வர்றதுக்கு ஆமணக்கு விதை சேர்க்கலாம் ஆமணக்கு விதைலேர்ந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கிறாங்கன்றது எல்லாருக்கும் தெரியும். அது உடம்பு சூட்டையும் தணிக்கும்.
 
 

சந்தை வாய்ப்பு:

நீங்கள் எந்த தொழில் செய்தாலும் உணையாகவும், நேர்மையாகவும் விடாமுயற்சியுடன் உழைத்தால் அதில் வெற்றி பெறலாம் . 
 
மேலும் வெற்றி பெற்ற பலரும் இதனை தான் செய்துள்லார்கள்உங்கள் பொருளின் தரம் தான் உங்கள் வியாபாரம் ஆகவே உங்கள் இட்லி மாவினை நல்ல தரமான பொருட்களை கொண்டு தயார் செய்யுங்கள் 
 
 
மேலும் சந்தை வாய்ப்பில் வித்தியாசமாக சிந்தித்து வெற்றி பெறுங்கள். நல்ல விளம்பரம் செய்யுங்கள்
 
உங்கள் இட்லி மாவிற்க்கு நல்ல பெயரை செலக்ட் செய்து  மாவுகென பேக் செய்யும் கவரில் உங்கள் கம்பெனி பெயரை பிரிண்ட் செய்யுங்கள் .
 
அதேபோல் சிறிய பாக்கெட் பெரிய பாக்கெட் என வித விதமாக பேக் செய்யுங்கள்மேலும் கல்யான ஆர்டர், ஹோட்டல் ஆர்டர், என சலைக்காமல் விடாமுர்ச்சியுடன் முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்

மேலும் சுய தொழில் வாய்ப்பு பற்றிய தெரிந்து கொள்ளுங்கள்

 

சுயதொழில் வாய்ப்பு: பேன்சி பிரிண்டிங் தொழில் செய்து எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்

 

ஒருமுறை முதலீடு !!! தினசரி வருமானம்!!! நிரந்தர வியாபார வாய்ப்பு!! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

 

சுயதொழில்: 50,000 முதலீட்டில் தினசரி வருமானம் வரும் சுய தொழில் வாய்ப்பு 

 

சுய தொழில்: டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் செய்து மாத வருமான பெறலாம்

 

8000 முதலீட்டில் வீட்டில் இருந்தே அருமையான சுயதொழில் வாய்ப்பு

  

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும்  பிரவுசிங் சென்டர்கள் 

 

சுயதொழில் ;போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்.வாங்க தெரிந்து கொள்வோம்

 

சுய தொழில் வீட்டில் இருந்தே தினம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம் இட்லி மாவு வியாபாரம்..! 

 

குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து  மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்  

 

சுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

 

 சுய தொழில் வாய்ப்பு: இயந்திரம் விலை 15,000/- மட்டுமே மாத லாபம் லட்சகணக்கில்

 


Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback