10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம ஊராட்சி செயலாளர் வேலை வாய்ப்பு - உங்கள் ஊரிலேயே வேலை விண்ணப்பிப்பது எப்படி
அட்மின் மீடியா
0
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம ஊராட்சி செயலாளர் வேலை வாய்ப்பு - உங்கள் ஊரிலேயே வேலை விண்ணப்பிப்பது எப்படி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மாத சம்பளம்:-
ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :-
30.10.2026-ன்படி
பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 35 வரையும்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் ஆகியோருக்கு 18 முதல் 37 வரையும்,
ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 முதல் 40 வரையும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயதிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பும், உள்ளது
கல்வித் தகுதி:-
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.100/- ஆகவும், ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 04.12.2026 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 18.12.2026 இரவு 11.59 மணி ஆகும்.
நேர்காணலுக்கான அழைப்பு 05.01.2027 அன்று அனுப்பப்படும்.
நேர்காணல் 19.01.2027 முதல் 21.01.2027 வரை 3 நாட்கள் நடத்தப்படும்.
தேர்வு முடிவுகள் 25.01.2027 அன்று வெளியிடப்படும்.
பணி நியமன ஆணை 27.01.2027 அன்று வழங்கப்படும்.
நிபந்தனைகளின்படி, விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு