Breaking News

தமிழகம் முழுவதும் மோட்டார் பம்ப் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மோட்டார் பம்ப் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு தமிழக அரசு அறிவிப்பு



தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகப் பணிக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) இயக்குபவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 3,941

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

மோட்டார் பம்ப் இயக்குவதில் 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

மாநிலம் முழுவதும் மொத்த அனுமதிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியிடங்களின் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 3941

மேற்காணும் காலிப்பணியிடங்களை விதிமுறைகளை நிர்ணயம் செய்யலாம். நிரப்புவது தொடர்பாக பின்வரும்

இருப்பிடத் தகுதி:

விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அல்லது தேவை உள்ள குறிப்பிட்ட குடியிருப்பில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அந்த குறிப்பிட்ட குடியிருப்பில் தகுதியான அல்லது பொருத்தமான விண்ணப்பதாரர் யாரும் கிடைக்கவில்லை எனில், அதே ஒன்றியத்தில் உள்ள

அருகில் இருக்கும் கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களைப் பரிசீலிக்கலாம்.



கல்வித் தகுதிகள்:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

மோட்டார் பம்ப் இயக்குவதில் (pump operating) 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது 58 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதர நிபந்தனைகள்;

இதுவரை மாத ஊதியமாக ரூ.250/- பெற்று வந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) இயக்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.

விசைபம்பை (power pump) இயக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

இத்தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நபர்கள் யாரும் இல்லை எனில், அருகில் இருக்கும் பஞ்சாயத்து மூலம் புதிய நபர் கண்டறியப்படுவார்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் (காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலையில் 2 மணி நேரம்). சில நேரங்களில் இரவு நேரப் பணி (night duty) கட்டாயமாகும்.

ஒரே காலிப்பணியிடத்திற்கு 2 பேருக்கு மேல் இருந்தால், வயதில் இளைய OHT இயக்குபவர் தொலைவில் உள்ள ஊராட்சி/குக்கிராமத்திற்கு இடத்திற்கு அனுப்பப்படுவார்.

மேற்காணும் விதிமுறைகளை பின்பற்றி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback