எங்கும் அலையாமல் ஆன்லைனில் 4 ஸ்டெப்பில் பத்திர பதிவு செய்வது எப்படி
எங்கும் அலையாமல் ஆன்லைனில் 4 ஸ்டெப்பில் பத்திர பதிவு செய்வது எப்படி
பொதுமக்கள் பத்திரங்களைத் தாங்களே தயாரித்து, பதிவு செய்வதற்கான நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை எளிய நான்கு படிநிலைகளில்(Just Four Steps) தாங்களே உருவாக்கிட பதிவுத்துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தி, பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களை STAR 3.0 இணையதளத்தில் எளிய நான்கு படி நிலைகளில் உருவாக்கும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் TNREGINET (www.tnreginet.gov.in) இணையதளத்தில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி உருவாக்கிய ஆவணங்களை காகிதமில்லா பதிவு முறை வழி தாங்களே பதிவுக்கு சமர்ப்பிக்கலாம். பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி ஆவணங்களை இணையவழியில் பதிவுக்கு சமர்ப்பிக்கும் எளிய படிநிலைகள் கீழே விளக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் 1:-
TNREGINET (www.tnreginet.gov.in) இணையதளத்தில் உள்நுழைந்ததும். "ஆவணப்பதிவு" என்ற தெரிவினைத் தெரிவு செய்யவும். உடனே, கீழ்க்கண்ட பக்கம் காண்பிக்கப்படும். அதில், இங்கே சொடுக்கவும் என்பதை சொடுக்கவும்.
1. ஆவண வகை தெரிவு:
எந்த வகை ஆவணத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ அந்த ஆவண வகையைத் தேர்ந்தெடுத்து, "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.(உம்.
2. விவரங்களை உள்ளீடு செய்தல்:
விற்பவர் வாங்குபவர்/ சாட்சிகளின் விவரங்கள் சொத்து விவரங்கள் மற்றும் பிற விவரங்களை நிரப்பிச் சமர்ப்பிக்கவும். உடன் தங்களுக்கு ஒரு டிபி எண் வழங்கப்படும்.
3. உள்ளீடு செய்த விவரங்களை சரிபார்த்தல்
உங்கள் ஆவணத்தை சரிபார்த்துப் பதிவிறக்கம் செய்யுங்கள். ஆவணம் ருவாக்கப்பட்டவுடன் "எனது ஆவணங்கள் பகுதியில் அதன் PDF வடிவத்தைப் பார்க்கலாம். பின்னர் PDF ஆகவும் பதிவிறக்கம் செய்யலாம்.
4 கட்டணம் செலுத்துதல்
பின்னர் ஆன்லைன் வழி செலுத்துக என்ற தெரிவின் வழி கட்டணம் செலுத்துலாம்.
5. காகிதமில்லா ஆவணப்பதிவு தெரிவு பின்னர் பதிவுசெய்தல்>ஆவணப்பதிவு> காகிதமில்லா ஆவணப்பதிவிற்கான வரைவு ஆவணச்சுருக்கம் என்பதை தெரிவு செய்யவும்
6. ஒ.டி.பி எண்ணை உள்ளீடு செய்து விபரங்களை உருவாக்குதல்:
மேலே மூன்றாம் படிநிலையில் தெரிவிக்கப்பட்ட டிபி எண்ணை உள்ளீடு செய்து கீழ்க்கண்டவாறு தகவல்களை உருவாக்கி கொள்ளவும்.
7. டோக்கன் முன்பதிவு மற்றும் காகிதமில்லா பதிவு:
ஆன்லைனில் OTP மூலம் இசைன் செய்யப்பட வேண்டும். பின்னர். தங்களுக்கு தேவையான நாள் மற்றும் நேரத்தினை தெரிவு செய்து முன் பதிவு வில்லை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆவணதாரர்கள் (Executant & Claimant மற்றும் சாட்சிகள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு (SRO) முன் பதிவு வில்லை தேர்ந்தெடுத்த (Token) நாள் மற்றும் நேரத்தில் நேரில் செல்லவும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரத்தைச் சரிபார்த்து இந்திய முத்திரைச் சட்டம், 1899 மற்றும் பதிவு சட்டம், 1908க்கு உட்பட்டு, கைரேகை (Fingerprint) அல்லது விழித்திரை (Iris) பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் UIDAI வழியாக இறுதி ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டு, சார்பதிவாளர் ஆவணத்தில் இ-சைன் (e-sign) மூலம் கையொப்பமிட்டு, ஆவணம் பெறப்பட்ட Loginக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
இடைத்தரகர்கள் இன்றி மேற்கண்ட எளிய வழிமுறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை தாங்களே உருவாக்கி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்







