Breaking News

அரபு கட்சிகள் ஆதரவால் இஸ்ரேலின் பிரதமர் பதவியை இழக்கிறார் நெதன்யாகு..!! புதிய பிரதமர் யார் தெரியுமா? முழு விவரம்

அட்மின் மீடியா
0

எதிர்கட்சிகளுக்கு அரபு கட்சிகள் ஆதரவால் இஸ்ரேலின் பிரதமர் பதவியை இழக்கிறார் நெதன்யாகு..!! புதிய பிரதமர் யார் தெரியுமா? முழு விவரம்

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இஸ்ரேல் நாட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) அன்று நடந்து முடிந்தது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை.

நெதன்யாகுவின் வலசாரி கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

ஐசென்கோட்டின் எதிர்த்தரப்புக் கூட்டணி 48 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 

அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகள் 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியைப் பிடிக்க நெதன்யாகுவும், ஐசென்காட்டும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதிய அரசை அமைப்பதில் ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணி கிங் மேக்கராக உருவாகியுள்ளது.

இஸ்ரேலின் புதிய பிரதமராவதற்கு ஐசென்காட்டிற்கு அரபு கட்சிகள் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பலம் 67ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, நெதன்யாகுவிற்கு ஆதரவு அளித்து வந்த யுனைடெட் தோரா ஜூடாயிஸம் என்ற கூட்டணி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது.7 இடங்களில் அந்தக் கட்சி வென்றுள்ளது. இது நெதன்யாகுவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

அரபு கூட்டணி கட்சிகளின் முடிவால் இஸ்ரேலின் புதிய பிரதமராக ஐசென்காட் தேர்வாக அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக 8ம் தேதி அழைப்பு விடுக்க இருப்பதாக அதிபர் ஐசக் ஹெர்ஷோக் தெரிவித்துள்ளார்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback