அமெரிக்க இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த டிரம்ப் முழு விவரம்
அமெரிக்க இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த டிரம்ப் முழு விவரம்
அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் எனப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இதன் முடிவுகள் ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி ( டிரம்ப் ) க்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினால் நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலை மாறும்.
பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்சபையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதைபோல மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், பைடன், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி 154 இடங்களிலும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
Tags: வெளிநாட்டு செய்திகள்

