Breaking News

சவுதி அரேபியா சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர்பலி! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியா சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர்பலி! முழு விவரம்



சவுதி அரேபியாவில் ஜுபைல் பகுதியில் உள்ள அபு ஹத்ரியா நெடுஞ்சாலையில் இரு டிரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சகாய ராஜ் செல்வ ஜெபமாலை (56), வாலன் பெரப் ராஜ் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரும் சென்ற டிரக் மீது எதிரே வந்த மற்றொரு டிரக் மோதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த சவுதி போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு நாரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

வெளிநாட்டில் பணியாற்றச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback