Breaking News

ஆட்டோ கட்டணம் உயர்வு அரசானை வெளியிட்ட தமிழக அரசு - புதிய கட்டண விவரம்

அட்மின் மீடியா
0
13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் உயர்வு!
தமிழக அரசு அரசிதழில் வெளியீடு – சென்னையில் குறைந்தபட்ச கட்டணம் ₹50!

தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

2026 அக்டோபர் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழின்படி, சென்னையின் பெருநகரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயக்கப்படும் ஒப்பந்த அடிப்படையிலான ஆட்டோக்களுக்கான புதிய கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

📌 புதிய ஆட்டோ கட்டண விவரங்கள்:

🔹 குறைந்தபட்ச தூரம்: 1.8 கி.மீ.

🔹 குறைந்தபட்ச கட்டணம்: ₹50

🔹 கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும்: ₹25

🔹 மலைப்பாதை கட்டணம்: குறைந்தபட்சக் கட்டணத்தில் 1.2 மடங்கு

🔹 மலைப்பாதையில் கூடுதல் கட்டணம்: கி.மீ. ஒன்றுக்கு ₹30

🔹 இரவு நேரக் கட்டணம்: இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் 1.5 மடங்கு

🔹 காத்திருப்புக் கட்டணம்: ஒரு நிமிடத்திற்கு ₹1

📄 அரசிதழ் விவரம்:

- வெளியீட்டுத் தேதி: 27 அக்டோபர் 2026
- அரசாணை எண்: G.O. Ms. No. 366, Home (Transport-I)

- அறிவிப்பு எண்: No. II(2)/HO/842(f)/2026
- அரசிதழ் எண்: 4661

Give Us Your Feedback