இன்று நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முழு விபரம் இதோ
இன்று நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல் 7 மாவ்ட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முழு விபரம் இதோ
வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளது..சென்னைக்கு கிழக்கே 260 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள முரசு புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் - வானிலை மையம்
31-10-26) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (31-10-26) காலை 1130 மணிஅளவில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Depression). பின்னர் இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து (01.11.2026) காலை 0530 மணிஅளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), 0830 அளவில் அதே பகுதியிலும் நிலவியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் (01.11.2026) காலை 1130 மணிஅளவில் புயலாக ("முரசு") (Cyclonic Storm) நிலவுகிறது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் (Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே 02.11.2026 நள்ளிரவு -03.11.2026 அதிகாலைவேளையில் கரையை கடக்கக்கூடும்.
சுமார் 1.5 கிமீ உயரத்தில் கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து தெற்கு மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.இதனால்
02-11-2026: ம்தேதி சென்னை மற்றும் திருவள்ளூர், மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்
