வங்ககடலில் மீண்டும் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்
வங்ககடலில் மீண்டும் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி இரவு வரை பரவலாக பெய்து வந்தது. அதன் பிறகு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நேற்று கரையை கடந்தது.புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதிஇதன் தொடர்ச்சியாக புயல் கரையை கடந்தது
இந்நிலையில் கிழக்கு திசை காற்று இன்னும் திரும்பாத நிலையில், தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது
இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்.மீண்டும் மழைஅதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 1-ம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளை நோக்கி தாழ்வு மண்டலம் வரக்கூடும்.
இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, உருவான பிறகு மேலும் வலுவடைந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்குகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
31-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
01-11-2026: வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
02-11-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-11-2026: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
04-11-2026: ញ់
மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்
