Breaking News

அரசு வேலைவாய்ப்பு வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு

அட்மின் மீடியா
0

அரசு வேலைவாய்ப்பு வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு


அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை/மதுரை துணை, வனச்சரகர் உட்பட அனைத்து துறைகளின் நேரடி நியமன சிறப்பு விதிகள் (Special Rules) மற்றும் தற்காலிக விதிகளில் (Adhoc Rules) உள்ள வயது உச்ச வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் உயர்த்தப்படுகிறது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 மற்றும் இதர அரசுப் பணித் தேர்வுகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் 1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பான 32, தற்போது 37-ஆக உயர்த்தப்படுகிறது. 

அதேபோல, குரூப் 1 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 47-இல் இருந்து 52 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இடஒதுக்கீடு பிரிவினருக்கு (BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும்.

1. குரூப் - I பதவிகள்:- 

பொதுப் பிரிவினர்: 32-ல் இருந்து 37 ஆக உயர்வு 

ஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, MBC, SC, ST): 37-ல் இருந்து 42 ஆக உயர்வு

மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு: 42-ல் இருந்து 47- ஆக உயர்வு

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவு: *47-ல் இருந்து 52 ஆக உயர்வு

2. குரூப் - II & II-A பதவிகள்:- 

பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35 ஆக உயர்வு

மாற்றுத்திறனாளிகள் பொது: *40-ல் இருந்து 45-ஆக உயர்வு 

3. குரூப் - IV பதவிகள்:-

பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35-

பொதுப் பிரிவில் பட்டதாரி (Having higher qualification): 32-ல் இருந்து 37- ஆக உயர்வு 

BC, BCM, MBC & DNC: 32-ல் இருந்து 37 / 40-ல் இருந்து 45- ஆக உயர்வு 

SC, ST மற்றும் ஆதரவற்ற விதவை: *35-ல் இருந்து 40 / 45-ல் இருந்து 50 ஆக உயர்வு 

போலீஸ், சிறை, தீயணைப்பு துறைக்கு 5 ஆண்டு வயது தளர்வு கிடையாது

காவல், சிறை, தீயணைப்பு போன்ற சீருடைப் பணிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களைப் பொறுத்த வரையில், தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பு மற்றும் சமூக நீதி தொடரும். அவர்களுக்கு இந்த 5 ஆண்டு தனியாக சேராது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback