தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
நவ.,5ம் தேதி இரவு 11:50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06151), மறுநாள் மதியம் 3:15 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது.
மறுமார்க்கத்தில் நவ.,9ம் தேதி இரவு 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06152), மறுநாள் மதியம் 12:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது.
நிற்கும் இடங்கள்: விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாகவும், ரயில் (06152) திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், வழியாக இந்த ரயில் செல்கின்றன.
தாம்பரம் - தென்காசி/ செங்கோட்டை - தாம்பரம்
நவ.,7ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06049), அன்று மாலை 4:45 மணிக்கு தென்காசி செல்கிறது.
மறுமார்க்கத்தில் நவ.,9ம் தேதி மதியம் 3:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06050), மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
நிற்கும் இடங்கள்: தென்காசி (ரயில் 06050), கடையநல்லுார், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக இந்த ரயில் செல்கின்றன.
சென்னை சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரயில்
ரயில் (எண்: 06023): நவம்பர் 6, 2026 (வெள்ளிக்கிழமை) இரவு 11:55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9:15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக ரயில் (எண்: 06024): நவம்பர் 9, 2026 இரவு 11:30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9:35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
நிற்கும் இடங்கள்: பெரம்பூர், திருவள்ளூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர்.
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்
ரயில் (எண்: 06153): நவம்பர் 6, 2026 இரவு 11:55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 3:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக ரயில் (எண்: 06154): நவம்பர் 9, 2026 இரவு 9:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
நிற்கும் இடங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்.
மதுரை- தாம்பரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
நவம்பர் 1- ஆம் தேதி இரவு 08.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் மதுரை- தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06188), மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
தாம்பரம் – போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் (எண்: 06059 / 06060) அக்டோபர் 31, 2026 முதல் நவம்பர் 15, 2026 வரை இயக்கப்படுகிறது.I
திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (எண்: 06070 / 06069) நவம்பர் 5, 2026 முதல் நவம்பர் 13, 2026 வரை இயக்கப்படுகிறது.I
Tags: தமிழக செய்திகள்
