Breaking News

தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டம் ரூ 5 லட்சம் - விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Vetri Veedu Thittam 2026

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டம்  ரூ 5 லட்சம் - விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Vetri Veedu Thittam 2026



இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெறலாம்?

யாருக்கெல்லாம் தகுதி உள்ளது?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான வெற்றி வீடு திட்டம்  Vetri Veedu Thittam தொடர்பான அரசாணை வெளியாகியுள்ளது.அரசாணை விவரம்:

வீட்டின் அளவு:

360 முதல் 500 சதுர அடி வரை, RCC கூரையுடன், சமையலறை உட்பட.- ஒரு வீட்டின் செலவு: ரூ.5 லட்சம் (Unit Cost)

முதற்கட்ட இலக்கு:2026-27ம் ஆண்டில் 70,000 வீடுகள் மொத்த செலவு ரூ.3,521 கோடி (ABSTRACT-ல் ரூ.3500 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது). 

குடிசை வீடுகள், மண் சுவர் வீடுகள் (எந்த கூரையாக இருந்தாலும்), கூரை மட்டும் குடிசையாக உள்ள வீடுகள் (Pucca சுவர் Weak கூரை) உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

கணக்கெடுப்பு பட்டியல் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலும், *http://tnrd.tn.gov.iழ இணையதளத்திலும் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலும் அதே போல் வெளிப்படையாக ஒட்டப்படும்.

பணியில் உள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும் தகுதியானவர்கள்.

பயனாளிகளுக்கு இரண்டு கட்டமாக கட்டுமான பொருட்கள் வழங்கப்படும்.

               

விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்கள்:

இத்திட்டத்திற்கான பயனாளிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் மேற்கொள்ளப்படும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு (door-to-door survey) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வமான ஆன்லைன் இணையதளம் அல்லது விண்ணப்பப் படிவங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தை (BDO office) நேரில் அணுகி விசாரிப்பது சிறந்தது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback