Breaking News

அக்வான் புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்

அட்மின் மீடியா
0

அக்வான் புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்



மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் & நிக்கோபார் தீவுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று காலை (13-11-26) 0530 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 0830 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15 ஆம் தேதி காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை புயலாக வலுப்பெறக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

13-11-2026 மற்றும் 14-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

15-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

16-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

17-11-2026 மற்றும் 18-11-2026: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

19-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback