தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் 1,890 காலிப்பணியிடங்கள்10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் 1,890 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) காலியாக உள்ள 1,890 பணியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை, அப்பணிகளைத் தற்காலிகமாக மேற்கொள்ள மகளிர் சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 1,890 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 1,714 விற்பனையாளர் (Salesperson) பணியிடங்களும், 176 கட்டுநர் (Packer / Weightman) பணியிடங்களும் அடங்கும்.
தற்காலிக ஏற்பாடு: மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (DRB) மூலம் நிரந்தரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படும் வரை மட்டுமே இந்தத் தற்காலிக ஏற்பாடு அமலில் இருக்கும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தகுதிகள்:சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புறப் பகுதியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் குழுவாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி மற்றும் ஊதியம்:
விற்பனையாளர்: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 400 வீதம், மாத ஊதிய வரம்பு ரூ. 7,500 வழங்கப்படும்.கட்டுநர்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 400 வீதம், மாத ஊதிய வரம்பு ரூ. 6,600 வழங்கப்படும்.
சம்பளம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.தேர்வு முறை: தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
இது குறித்து வெளியான அறிவிப்பில்:-
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் 3108.2026 அன்றுள்ளபடி 1714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 கட்டுநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இக்காலிப்பணியிடங்களால் விற்பனையாளர்கள் கூடுதல் பொறுப்பில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (DRB) மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்வது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதால் காலதாமதம் ஏற்படும். எனவே, அதுவரையிலான இடைப்பட்ட காலத்தில் பொது விநியோகத் திட்டப் பணிகள் தடையின்றி நடைபெறும் வகையில், நியாயவிலைக் கடை விநியோகம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு காலிப்பணியிட நியாயவிலைக் கடைகளைத் தற்காலிகமாக நடத்துவதற்கான நிலையான செயல்முறை நடைமுறைகள் (SOP) பார்வையில் காணும் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. தேவை ஏற்படும் நேர்வில், இல்லம் சென்று பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டப் பணிகளுக்கும் இவர்களைத் தற்காலிகமாக ஈடுபடுத்தலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சுய உதவிக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் கீழ்க்கண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் திட்ட அலுவலர், மகளிர் திட்டம் அவர்கள் உறுப்பினராக உள்ளார்கள்.
1. சுய உதவிக் குழுக்களைக் கண்டறிதல் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை அமைந்துள்ள ஊராட்சி / நகர்ப்புற வார்டு பகுதியைச் சார்ந்த, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வரும். தரமதிப்பீடு (Grading) பெற்ற வங்கிக் கடன் திருப்பிச் செலுத்துதலில் நிலுவை இல்லாத. கூட்டங்கள். சேமிப்பு மற்றும் கணக்குப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கும் குழுக்களைக் கண்டறிதல் வேண்டும்.
ii. உறுப்பினர்களின் தகுதியைச் சரிபார்த்தல்; விற்பனையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும். கட்டுநர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றவராகவும், கடை அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குள் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இல்லாதவராகவும், அரசு கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கனவே பணியில் இல்லாதவராகவும், சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர்கள் பணியாளர்களின் நெருங்கிய உறவினர் அல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
iii. விண்ணப்பங்களைப் பெறுதல்: தகுதியான உறுப்பினர்களிடமிருந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.
IV. அடிப்படைப் பயிற்சி அளித்தல் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நியாயவிலைக் கடை விற்பனை தொடர்பான அடிப்படைப் பயிற்சி வழங்கி, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு முன் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் மூலம் அளிக்கப்படும் பயிற்சியில் (cPoS இயக்கம், விரல் ரேகை / கருவிழி அங்கீகாரம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட உரிமங்கள், இருப்பு மற்றும் விற்பனைப் பதிவேடுகள் பராமரிப்பு, தினசரி வசூல் தொகையைச் செலுத்துதல், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் நடத்தை விதிகள்)அவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
V. பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்குதல். தகுதியான சுய உதவிக் குழு உறுப்பினர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இறுதி செய்வதற்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.
vi. நிபந்தனைகளைத் தெரிவித்தல் இந்த ஒதுக்கீடு முற்றிலும் தற்காலிகமானது
என்பதையும் DRB மூலம் பணியாளர் நியமிக்கப்படும் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதையும் உறுப்பினர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். பணி வரன்முறை நிரந்தரப் பணி அல்லது முன்னுரிமை எதுவும் கோர மாட்டேன் என்ற உறுதிமொழிப் பத்திரம், சங்கம் நிர்ணயிக்கும் பிணை வைப்புத் தொகை ரூ.10,000/- மற்றும் ரூ.100,000/-க்கான நம்பக உத்திரவாதக் காப்பீடு (Fidelity Guarantee) ஆகியவை சங்கத்தால் பெறப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
Vii . ஊதிய விவரம்: தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு
நாளொன்றுக்கு 5.400/- வீதம். மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக விற்பனையாளருக்கு ரூ.7,500/- மற்றும் கட்டுநருக்கு ரூ.6.600/-க்கு மிகாமல். சம்பந்தப்பட்ட சங்கத்தால் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட பணிகளை மண்டல இணைப்பதிவாளருடன் ஒருங்கிணைந்து விரைந்து மேற்கொண்டு எடுக்கப்பட்டநடவடிக்கை விவரத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு
Tags: தமிழக செய்திகள்
