அமீரகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 23 வாகனங்களில் மோதி கோர விபத்து தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்- இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி!
அமீரகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 23 வாகனங்களில் மோதி கோர விபத்து தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்- இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தை லாரியால் சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து மொத்தம் 23 வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் கேரளாவை சேர்ந்த 3 இந்தியர்கள் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோதலின் காரணமாக லாரி தீப்பிடித்ததாகவும், அந்தத் தீ மேலும் பல வாகனங்களுக்குப் பரவியதால், பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் முப்பது பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், மரணமடைந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஃபுஜைரா காவல்துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம், மரணமடைந்தவர்களில் இந்தியக் குடிமக்களும் அடங்குவதாகத் தெரிவித்ததோடு,மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்குவதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
மொத்தம் 18 கார்கள் மற்றும் 5 லாரிகள் என 23 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். காயமடைந்த 30 பேரில் 15 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
