Breaking News

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்!

அட்மின் மீடியா
0
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்!

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

வி.எஸ். பாபு கடந்த 70 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Give Us Your Feedback