Breaking News

ஆன்லைனில் இ-சி எஸ் ஆர் பதிவு செய்வது எப்படி tn police csr apply online

அட்மின் மீடியா
0

ஆன்லைனில் இ-சி எஸ் ஆர் பதிவு செய்வது எப்படி tn police csr apply online

பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை இன்று  டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் துவக்கிவைத்தார்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே இ-சிஎஸ்ஆர் (e-CSR) ரசீதை இணையதளம் மூலம் பெறலாம். இதுவரை, புகார் அளிப்பவர்கள் CSR ரசீதைப் பெற காவல் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. 

புதிய வசதி மூலம், இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைனில் புகார் பதிவு செய்து மின்னணு ரசீதை பெற்றுக்கொள்ளலாம். www.police.tn.gov.in இணையதளம் மூலம் கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சமாகும். புகார்கள் மீதான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும் விரைவும் அதிகரிக்கும்.

ஆன்லைனில் சிஎஸ்ஆர் பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.police.tn.gov.in/citizenportal

தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான Tamil Nadu Police Website என்ற முகவரிக்குச் செல்லவும்

citizen services   என்பதை கிளிக் செய்து அடுத்து வரும் பக்கத்தில்  free service    என்பதை கிளிக் செய்யவும் அடுத்து அதில் register complaint e csr என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து register என்பதை கிளிக் செய்து உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து அதன் பின்பு லாகின் செய்யவும்

அடுத்து உங்கள் புகார் குறித்த விவரங்கள், தொலைந்துபோன ஆவணங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்

.ஒப்புகை ரசீது:புகார் பதிவு செய்தவுடன், அது தானாகவே இ-சிஎஸ்ஆர் (e-CSR) ஆகப் பதிவாகும்

புகார்தாரருக்கு தனித்துவமான இ-சிஎஸ்ஆர் எண்ணுடன் கூடிய ஒப்புகை ரசீது உடனடியாக SMS மூலம் அனுப்பப்படும். அந்த மின்னணு ரசீதை நீங்கள் ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



How to Apply for e-CSR Online

Go to the official Tamil Nadu Police Citizen Portal.

Click on the Register Online Complaint option.

Fill in the required details regarding the minor offence or complaint.

Submit the form to receive an e-CSR receipt on your mobile phone via SMS

Approach your jurisdictional police station with the e-CSR receipt and supporting documents within 3 days if it needs to be converted into a regular CSR or FIR.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback