Breaking News

சுயதொழில் தொடங்க பெண்கள் சிங்கப்பெண் கடன் திட்டத்திற்க்கு விண்ணப்பிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

சுயதொழில் தொடங்க பெண்கள் சிங்கப்பெண் கடன் திட்டத்திற்க்கு விண்ணப்பிப்பது எப்படி


தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் சிங்கப்பெண் கடன் திட்டத்தில் சுயதொழில் தொடங்கவும் விரிவுபடுத்தவும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; 

நவம்பர் 2026 வரை 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் முக்கிய விவரங்கள்நோக்கம்: 

கந்துவட்டிப் பிடியிலிருந்து பெண்களை மீட்டு, புதிய சுயதொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடனுதவி வழங்குவது.

பயனாளிகள்: மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பணிபுரியும் மகளிர்.

எங்கு விண்ணப்பிப்பது?

அருகிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு 98840 00845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

சிங்கப்பெண் கடன் திட்டத்தில் சுயதொழில் தொடங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்..

குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தன்னம்பிக்கை மிக்க தொழில் முனைவோராக உயர்த்தவும் கூட்டுறவுத்துறை மகத்தான பங்காற்றி வருகிறது. 

சிங்கப்பெண் கடன் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர் கடனுதவி பெற்று பயனடையலாம்.

ரூ.3,428.49 கோடி கடன்கள்கந்துவட்டி பிடியிலிருந்து மக்களை மீட்டு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுப்படுத்த விரும்பும் பெண்களும் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெற்று பயன் அடையலாம். 

அவ்வாறு நடப்பாண்டில் இந்த மாதம் வரை 41 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback