Breaking News

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!

அட்மின் மீடியா
0

கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

எழுத்துப்பூர்வமான புகார் புகார் அளிக்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்தும், வாய்மொழியான புகார் அளிக்கப்பட்டு 117 நாட்களுக்குப் பிறகு அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் அருள் விக்னேஷ்-ஐ கைது செயதானர். எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்தும், வாய்மொழியான புகார் அளிக்கப்பட்டு 117 நாட்களுக்குப் பிறகு அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கலெக்டர் புகார் கொடுத்தார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷனாஸ், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். 

அதன்பேரில், அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback