Breaking News

ஆஸ்திரேலிய துப்பாக்கி சூடு... துணிச்சலாக எதிர்த்து நின்று துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமது நடந்தது என்ன - வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Bondi கடற்கரையில் மர்ம நபர்கள் பொதுமக்களை நோக்கி 2 நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு

இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் காயமடைந்ததாகவும் தகவல். 


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14)  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

சிட்னியில் பல அழகான கடற்கரைகள் இருந்தாலும் (Palm Beach, Manly Beach, Coogee Beach போன்றவை), இந்தச் சம்பவம் போண்டி கடற்கரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும், சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் மக்கள் அலறியடித்து ஓடுவதும், துப்பாக்கிச் சத்தங்களும், காவல்துறையின் சைரன் ஒலிகளும் கேட்பதும் பதிவாகியுள்ளது

கருப்பு உடை அணிந்த இரண்டு நபர்கள் கடற்கரையில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகேச் சுடுவதாகக் காணப்பட்டனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவன் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போலீசாரும், அவசரகால மீட்புப் படையினரும் மக்களை காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். போலீசாருடன் பேசியுள்ளேன். அவர்கள் கூறும் அறிவுரையை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? பயங்கரவாத நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை உயிரைப் பணயம் வைத்து பிடித்த நபர் – பரபரப்பு வீடியோ!

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் துப்பாக்கியால் ஒருவர் பொதுமக்களை நோக்கி சுட்டு கொண்டு இருக்கிறார். அப்போது ஒரு நபர் காருக்கு பின் மறைந்து சரியான சந்தர்ப்பத்தில் நேருக்கு நேர் எதிர்த்து அந்த நபரிடம் துப்பாக்கியை பிடிங்கி விடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து ஓடுகிறார்.  தன் உயிரை பணயம் வைத்து பலரது உயிரை காப்பாற்றிய துணிச்சலான அந்த நபருக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கடற்கரை பார்கிங் அருகே நின்று ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருந்தார். அப்போது காரின் பின்னால் ஒளிந்து கொண்டே தனது உயிரையும் பொருட்படுதாமல் அந்த மர்ம நபர் மீது பாய்ந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது

மர்ம நபரை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த அகமது ஒரு பழ வியாபாரியாம். இந்தத் தாக்குதலின்போது அகமது மீதும் இரு குண்டுகள் பாய்ந்துள்ளன. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் உள்ளார்.

அவரது துணிச்சலுக்கும், துரிதச் செயலுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூட அவரை "ஹீரோ" என்று பாராட்டியுள்ளார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2000170307764785568

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2000245468308308252

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback