27.04.2026 ம் தேதிக்குள் பதிவு செய்யாதவர்கள் பிறப்பு சான்றிதழ் பெற முடியாதா? வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் உண்மை என்ன deadline to apply for birth certificates
அட்மின் மீடியா
0
27.04.2026 ம் தேதிக்குள் பதிவு செய்யாதவர்கள் பிறப்பு சான்றிதழ் பெற முடியாதா? வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் உண்மை என்ன
A message circulating on WhatsApp claims that the Union Government has fixed April 27, 2026, as the final deadline to apply for birth certificates.
கடந்த சில நாட்களாகவே, சோஷியல்மீடியாவிலும், வாட்ஸ்அப் குரூப்களிலும், ஒரு தகவல் வேகமாக பரவியது.. அதாவது, "பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் ஏப்ரல் 27, 2026க்குள் பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும். அதற்குப் பிறகு பதிவு செய்ய முடியாது" என்று அந்த தகவல் பரவியது.
பரவும் செய்தி:-
*அரசின் பெரும் அதிர்ச்சி செய்தி*
*பிறப்பு பதிவு இல்லாத குடிமக்கள் 2026 ஏப்ரல் 27 வரை மட்டுமே பதிவு செய்ய முடியும்.* அந்த தேதிக்குப் பிறகு எந்தச் சூழ்நிலையிலும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், *பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) சட்டம் 2023 நாடு முழுவதும் 2023 அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.* இனி பிறப்பு சான்றிதழ் பல்வேறு அரசாங்க நோக்கங்களுக்கான முக்கிய ஆதார ஆவணமாக பயன்படுத்தப்படும்.
*முஸ்லிம் சமூகத்தினர் கவனிக்க வேண்டும் —* பிறப்பு சான்றிதழ் குடியுரிமைக்கு வலுவான ஆதாரமாக கருதப்படும். பலர் பள்ளி சான்றிதழில் உள்ள பிறந்த தேதி போதும் என்று தவறாக நம்புகிறார்கள். இந்தத் தவறை செய்யாதீர்கள்.
முன்னதாக பெயர் சேர்க்கும் கடைசி தேதி 2020 மே 14 ஆக இருந்தது, *இப்போது அது 2026 ஏப்ரல் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.* பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்க, குடிமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அலுவலகத்திற்கு பள்ளி விலகல் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் (10ம் / 12ம் வகுப்பு), பாஸ்போர்ட், PAN கார்டு, அல்லது ஆதார் கார்டு போன்ற இரண்டு ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் மகாராஷ்டிரா பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000 இன் பிரிவு 10ன் படி, சட்ட வழிமுறையினூடாகவும் பிறப்பு பதிவு பெற முடியும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு அல்லது இறப்பு பதிவுகள் இல்லையெனில், அவை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். மூத்த முஸ்லிம்களில் சுமார் 75% பேருக்கு பிறப்பு மற்றும் திருமண பதிவுகள் இல்லை. பலர் ஹஜ் பயணம் தயாரிப்பின்போது தான் பதிவு செய்ய முயல்கிறார்கள். இப்போது, பிறப்பு பதிவு தாலுகா அலுவலகம் (Tehsil Office) மூலமாகவும் சட்ட வழிமுறையில்லாமல் பெற முடியும். பல முஸ்லிம்கள் இதை அறியவில்லை அல்லது கவனிக்கவில்லை. எதிர்காலத்தில் இது பிரச்சனையாக மாறக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
பிறப்பு சான்றிதழ் பள்ளி/கல்லூரி சேர்க்கை, வேலை, வெளிநாட்டு பயணம்
மற்றும் பிற முக்கிய தேவைகளுக்குத் தேவைப்படும். இப்போது பல குடும்பங்கள் பதிவு செய்கிறார்கள், ஆனால் சிலர் இன்னும் செய்யவில்லை. அரசு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது — 1969க்கு முன் அல்லது பின் பெயரில்லாமல் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பெயரைச் சேர்க்கும் வகையில். இது பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது, மற்றும் அனைத்து உள்ளூர் தன்னாட்சி அமைப்புகளுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
முன்பு வீட்டில் பிரசவங்கள் அதிகம் நடந்ததால் பிறப்பு பதிவு பெரும்பாலும் செய்யப்படவில்லை அல்லது புறக்கணிக்கப்பட்டது. நகரங்களில் கூட, மருத்துவமனைகள் பதிவு செய்தாலும், பல குடும்பங்கள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறவில்லை. இப்போது அரசு பெயரில்லா பிறப்பு பதிவுகள் (15 ஆண்டுகள் கடந்தவை) கொண்ட குடிமக்களுக்கு பெயரை சேர்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. *இந்த வாய்ப்பு 2026 ஏப்ரல் 27 வரை மட்டுமே இருக்கும்* , மேலும் மீண்டும் நீட்டிக்கப்படாது.
பல நேரங்களில் பிறப்பு பெயரில்லாமல் பதிவு செய்யப்படுகிறது; பின்னர் குழந்தையின் பெயரைச் சேர்க்க விரும்பினால் அது சாத்தியம். 15 ஆண்டுகள் கடந்த பெயரில்லா பிறப்பு பதிவுகளுக்கும் பெயரைச் சேர்க்கலாம். பிறப்பு/இறப்பு சான்றிதழ் ஆதார் கார்டைப் போல பயன்படுத்த முடியுமா? இதுவரை ஆதார் கார்டே முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இனி பிறப்பு/இறப்பு சான்றிதழும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள ஆவணமாக பயன்படும். மத்திய அரசின் உத்தரவின்படி, இந்த அதிகாரம் மாவட்ட ஆட்சியர் (District Magistrate) அல்லது துணை பிரிவு அலுவலர் (Sub-Divisional Officer) களுக்கு வழங்கப்பட்டுள்ளது
👉 *குறிப்பு* : இந்த தகவலை உங்கள் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகிருங்கள். *நன்றி*
உண்மை என்ன:-
மேலே உள்ள தகவல் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது..
மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.அரசின் PIB Fact Check பிரிவு வெளியிட்ட விளக்கத்தில், பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான எந்த கடைசி தேதியும் அரசு அறிவிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது
அதில், "பிறப்புச் சான்றிதழுக்காக எந்த ஒரு இறுதி தேதியையும் அல்லது காலக்கெடுவையும் அரசு நிர்ணயிக்கவில்லை.. சமூக ஊடகங்களில் பரவும் இந்த செய்தி போலியானது. .
கடந்த ஆகஸ்ட் 2023ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம்" தொடர்பான செய்திகளை மையமாக கொண்டு இந்த தகவல் பரப்பப்படுகிறது.
திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அனைத்துப் பிறப்புகள் மற்றும் இறப்புகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அரசு எந்த கடைசி நாளையும் அறிவிக்கவில்லை. பிறந்த இடத்திலேயே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை மட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.
அதேபோல், பிறப்பு சான்றிதழில் பெயர், தேதி போன்ற விவரங்களில் பிழை இருந்தால் அதைத் திருத்துவதற்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
A message circulating on WhatsApp claims that the Union Government has fixed April 27, 2026, as the final deadline to apply for birth certificates. #PIBFactCheck ✔️ The claim is #FAKE ✔️ The Government of India has issued no such notification or deadline regarding birth certificates. ✅ Avoid sharing unverified information and rely only on official Government of India sources for accurate information. If you come across any suspicious document related to the Government of India, send it to @PIBFactCheck at👇