Breaking News

துபாயில் உள்ள உலகின் மிக உயரமானக் கட்டிடமான புர்ஜ்கலிஃபா அருகே ஈரான் தாக்குதல் வீடியோ

அட்மின் மீடியா
0

துபாயில் உள்ள உலகின் மிகஉயரமானக் கட்டடமான புர்ஜ்கலிஃபா அருகே ஈரான் தாக்குதல் வீடியோ 



ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக, உலகின் மிக உயர கோபுரமான புர்ஜ் கலிஃபாவை காலி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடத்திய ராணுவ தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாய் நகரங்கள், கட்டாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

துபாயின் பல்வேறு பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதை தொடர்ந்து, 828 மீட்டர் உயரமுள்ள புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபாய சைரன்கள் முழங்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அபுதாபியை நோக்கி வந்த ஈரானிய ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை தடுத்து அழித்தது. இருப்பினும், அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏவப்பட்ட 2-ம் கட்ட தாக்குதலாக ஏவுகணைகளையும் அமீரக ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,வளைகுடா நாடுகள் மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்-தாஃப்ரா (Al-Dhafra) விமானப்படைத் தளம், கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தொடர்புடைய ராணுவத் தளங்கள், பஹ்ரைன் அமெரிக்கக் கடற்படையின் 5வது படைப்பிரிவு சேவை மையம் ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டது. 

கத்தார் தனது வான்வெளியில் இரு ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்துப் பன்னாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது வேறு நாடுகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. 

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து போர் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இது "பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளின் (Major combat operations) தொடக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2027808530393354294

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback