கூகுள் பேவில் இரண்டு கைகள் குலுக்குவது போல் உள்ளதை செலக்ட் செய்தால் பணம் பறிபோயிடும் என பரவும் ஆடியோ உண்மை என்ன Google Pay New Scam fake news | google pay pocket money fake news
அட்மின் மீடியா
0
கூகுள் பேவில் உள்ள கை சிம்பிள் செலக்ட் செய்தால் பணம் பறிபோயிடும் என பரவும் ஆடியோ உண்மை என்ன Google Pay New Scam fake news | google pay pocket money fake news
பரவும் செய்தி:-
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஓர் ஆடியோ வைரலாக பரவு கின்றது. அதில் உங்கள் கூகுள் பேவில் இரண்டு பேர் கை கொடுக்கும் படி உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யாதீர்கள் அதனை கிளிக் செய்தால் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பணமும் காலியாகி விடும் என அதில் ஒருவர் கூறுகின்றார்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கூகுள் பே-யின் "பாக்கெட் மணி" அம்சம் ஒரு மோசடி அல்ல, மாறாக இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு அதிகாரப்பூர்வ வசதியாகும். இதை கிளிக் செய்வதால் பணம் தானாகவே மறைந்துவிடாது;
மாறாக, நீங்கள் நிர்ணயித்த வரம்பு அல்லது நீங்கள் அங்கீகரித்த கட்டணத்தின் அளவுக்கு மட்டுமே பணம் செலவழிக்கப்படும்.சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளிலிருந்து விலகி இருங்கள், எதையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் நம்பாதீர்கள் — இந்த அம்சம் பாதுகாப்பானது மற்றும் முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
Google Pay ல் உள்ள அந்த ❤️ ஐகான்: 👉 Pocket Money / Favourite contact சிம்பிளா சொன்னா: அடிக்கடி பணம் அனுப்பும் ஒருவரை quick shortcut ஆக வைக்கும் மாதம் மாதம் automatic payment (pocket money) செட் செய்யலாம் ✅ Tap பண்ணுங்க → person select பண்ணுங்க → easyஆ money send அதுதான் 👍
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) டிஜிட்டல் பேமெண்ட் வசதியை மேம்படுத்தும் நோக்கில் "UPI சர்க்கிள்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
UPI சர்க்கிள் அம்சத்தின் கீழ் இணைக்கப்படும் குடும்பத்தினரும் நண்பர்களும் முதன்மை பயனரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். சொந்த வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கூட டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை செலுத்தலாம்
UPI சர்க்கிள் என்றால் என்ன:- UPI Circle
UPI சர்க்கிள் (UPI Circle) என்பது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்திய ஒரு புதிய அம்சம். இது முதன்மைப் பயனர் (Primary User) தனது வங்கிக் கணக்கை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் (Secondary Users) பகிர்ந்து, அவர்கள் தங்கள் சொந்த UPI ID மூலம் பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது.
இது வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
இது முதன்மைப் பயனர் (Primary User), தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு (குடும்பத்தினர் அல்லது சார்ந்திருப்போர்) தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த அதிகாரம் அளிக்கும் வசதியாகும்.
இதில் கணக்கு உரிமையாளரே முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார். டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யத் தயங்கும் முதியவர்கள், தங்கள் பிள்ளைகளின் கணக்கு மூலம் பாதுகாப்பாகச் செலவு செய்ய இது உதவும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு 'டிஜிட்டல் பாக்கெட் மணி' வழங்கலாம்.
இதன் மூலம் அவர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்காணிக்க முடியும். சிறு வணிகங்களுக்கு அதாவது கடை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களிடம் எரிபொருள், இதர செலவுகளுக்காகக் குறிப்பிட்ட வரம்புடன் இந்த வசதியை வழங்கலாம்.
மேலும் முழு அதிகாரம் (Full Delegation) உங்க ஒப்புதல் இன்றி அவர்கள் பணம் செலுத்தலாம். பகுதி அதிகாரம் (Partial Delegation) ஒவ்வொரு முறை அவர்கள் பணம் செலுத்தும்போதும் உங்க அனுமதி தேவைப்படும். செலவுக்கான வரம்பை (Spending Limit) நிர்ணயித்து, உங்கள் யு.பி.ஐ பின் மூலம் உறுதி செய்யவும்.
ஒரு முதன்மைப் பயனர் அதிகபட்சமாக 5 பேரை தனது கணக்கில் இணைக்கலாம். மாதாந்திரச் செலவு வரம்பு அதிகபட்சமாக ரூ.15,000 வரை நிர்ணயிக்கப்படலாம். இந்த அணுகல் அனுமதியை 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் வழங்கலாம். பரிவர்த்தனைகளை நேரலையில் (Real-time) கண்காணிக்கவும், எப்போது வேண்டுமானாலும் அனுமதியை ரத்து செய்யவும் வசதி உண்டு.
எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
