இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி Final voter list 2026
தமிழக சட்டபேரவைக்கு ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை, தேர்தலையொட்டி, மாநிலம் முழு தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. இதன்படி, கடந்த டிச., 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட்டுள்ளார்
பொதுமக்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா ஒரே ஒரு SMS அனுப்பினால் போதும் தேர்தல் ஆணையம் உடனே உங்கள் ஓட்டு விவரத்தை பதில் மெசஜாக அனுப்பும்
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்!
உங்கள் மொபைல் போனில் மெசஜ் ஆப்பில்
ECI <space> உங்கள் EPIC எண்
(உதாரணம்: ECI TSK0000000) டைப் செய்து
'1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால்,
அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும் அவ்வளவுதான்
ஒருவேளை தகவல் வரவில்லை என்றாலோ அல்லது பெயர் நீக்கப்பட்டிருந்தாலோ, உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது அதிகாரிகளிடமோ முறையிடலாம்.
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி
