உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு உத்தரவு Two-Wheeler Subsidy Scheme for Ulemas
உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு உத்தரவு Two-Wheeler Subsidy Scheme for Ulemas
The Tamil Nadu government offers a special financial assistance program allowing eligible Ulema (Muslim scholars) to purchase two-wheelers at a subsidized rate. The state government issues press releases and application forms through the Backward Classes, Most Backward Classes, and Minorities Welfare Department.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய திருச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் / சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயணளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் 30.06.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
1. தமிழ்நாட்டில் வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள வஃக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
2. தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல்வேண்டும்.
3. 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
4. விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று, வயதுச் சான்றிதழ், புகைப்படம், சாதிச்சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம்/ LLR, வங்கிகணக்கு எண், மற்றும் IFSC குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்றுபெற்று வஃக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் / விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்படவேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

