Breaking News

ஜிப் லைன் சாகசத்தின் போது லாக் ரிலீஸ் ஆகி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர் அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் சுற்றுலாப் பயணி ஜிப் லைன் சாகசத்தின் போது திடீரென லாக் ரிலீஸ் ஆகி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்..



கர்நாடகா மாநிலம் தண்டேலியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இளைஞர் ஒருவர் ஜிப்லைன் சாகச விளையாட்டில் ஈடுபட்ட போது, பாதுகாப்புப் பூட்டு திடீரென அறுந்து விழுந்ததில் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.

40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இளைஞர் குபேர் சுர்பூரின் கால்,கை என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்த இளைஞரை உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வரருகிறது.

தண்டேலியில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மிராஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவருக்கு பல அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஜிப்லைனில் சென்றுக் கொண்டிருந்தபோது, கயிறு அறுந்து கீழே விழும் காட்சிகள் பதிவாகி உள்ளது. 

அதிர்ச்சி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/BT_Bazaar/status/2079060605273776434

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback