Breaking News

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவனைக் கடித்துக் கொன்று இழுத்துச் சென்ற முதலை... வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவனைக் கடித்துக் கொன்று இழுத்துச் சென்ற முதலை... வைரல் வீடியோ



உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12 வயதுச் சிறுவன் வழக்கம் போல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது ஆற்றுத் தண்ணீருக்குள் மறைந்திருந்த ராட்சத முதலை ஒன்று அந்தச் சிறுவனைத் திடீரெனத் தாக்கி ஆழமான பகுதிக்குக் கடித்து இழுத்துச் சென்றுள்ளது. 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சிறுவனை காப்பாற்ற முயன்றனர், சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உள்ளூர் காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் பல மணி நேரம் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிறுவனின் உடல் பாகங்கள் ஆற்றில் இருந்து பரிதாபமாக மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/upuknews1/status/2078330820042105289/video/2

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback