Breaking News

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஆந்திராவில் 2 பேர் உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஆந்திராவில் 2 பேர் உயிரிழப்பு முழு விவரம்

ஆந்திரப் பிரதேசத்தில் கோவிட்-19 தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும்  8 பேர் சிகிச்சை பெற்று வருவதால் ஆந்திரப் பிரதேசம் உஷார் நிலையில் உள்ளது.கடந்த சில மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் கோவிட்-19 மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் எட்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து, சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

கடப்பாவின் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர், காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதேபோல் உடல்நலக் கோளாறுகள் காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடப்பாவைச் சேர்ந்த 43 வயது நபருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின்னர் கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகக் கொரோனா தொற்றுப் பாதிப்பு மீண்டும் கணிசமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநிலச் சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறியும் வகையில், அனைத்து அரசு மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் 'ஆர்டி-பிசிஆர்' பரிசோதனைக் கருவிகளைப் போதிய அளவில் இருப்பு வைக்கவும், பரிசோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மற்றும் குளிர்காலக் காலநிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற அத்தியாவசியத் தற்காப்பு வழிமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback