தமிழ்நாட்டில் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்த இடங்களில் மாடுகளை வெட்டத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்த இடங்களில் மாடுகளை வெட்டத் தடை என்ற உத்தரவு நீக்கம்!
தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பக்ரீத் அல்லது வேறு எந்த பண்டிகைக்கும் மாடுகள், கன்றுகளை வெட்டக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தாண்டி பொது இடங்களில் மாடுகளை வெட்டக் கூடாது என்றும், மாடுகளை வெட்டும் முன்பாக அவை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்றும், கன்றுக்குட்டிகள் வெட்டப்படுகின்றனவா என்றும் சோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கடந்த மே 27-ம் தேதி விசாரித்தது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு பொது இடங்களில் மாடுகளை வெட்டக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து பொது இடங்களில் எந்தவொரு விலங்கினங்களையும் வெட்டக்கூடாது. அவ்வாறு பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலரும், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யும் உறுதி செய்ய உத்தரவிட்டனர்
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜெய் நரசிம்மன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கோராத கோரிக்கையைத் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மனுதாரர் எழுப்பாத பிரச்சினைகளையும் உயர் நீதிமன்றம் விவாதித்துள்ளது.
எனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்நிலையில், பொது இடத்தில் மாடுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
