வியட்நாம் ஃபூ குவோக் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து- தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் பலி முழு விவரம்
அட்மின் மீடியா
0
வியட்நாமில் இன்று (ஜூலை 11) 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் அதிவேகப் படகு ஒன்று Han May Rut) பகுதியில் இருந்து ஃபுகுவோக் தீவு அருகே உள்ள An Thoi Port க்குச் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது Hon May Rut Ngoai பகுதிக்கு அருகில் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்துள்ளனர்.
தகல் அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர
இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.
மீட்புக்குழுவினர் 18 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த வணிக செயல்பாட்டிற்காக லாவா செல்போன் நிறுவனம் செல்போன் கடை உரிமையாளர்கள், நிறுவன ஊழியர்கள் உள்பட சிலரை வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. அவர்களும் இந்த படகு விபத்தில் சிக்கியுள்ளனர்.
தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை கட்டணமில்லா உதவி எண்களை (1800 309 3793) தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தூதரகத்தின் தொலைபேசி உதவி எண்கள்:
+84 36 281 7930,
+84 91 552 37 14
+84 33 452 0414