சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு 125-வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா முதல் இடம் எந்த நாடு தெரியுமா international passport index
சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு 125-வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா முதல் இடம் எந்த நாடு தெரியுமா India has been pushed to 125th place in the international passport index, do you know which country is the first?
பாஸ்போர்ட் குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான 'குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ்' வெளியிட்டுள்ள 5-வது ஆண்டு 'சர்வதேசப் பாஸ்போர்ட் குறியீடு 2026' தரவரிசைப் பட்டியலில், இந்தியப் பாஸ்போர்ட் உலகளவில் 125-வது இடத்தைப் பிடித்துள்ளது.
குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் (Global Citizen Solutions) என்பது முதலீட்டின் மூலம் குடியுரிமை (Citizenship by Investment) மற்றும் குடியிருப்பு (Residency by Investment) சேவைகளை வழங்கும் ஒரு சர்வதேச ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் வெளிநாடுகளில் குடியேற, முதலீடு செய்ய, மற்றும் சர்வதேச பாஸ்போர்ட் பெற விரும்பும் நபர்களுக்கு உதவுகிறது.
இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டை (Global Passport Index) வெளியிட்டு புகழ்பெற்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டு குறியீட்டில், இந்திய பாஸ்போர்ட் 197 நாடுகளில் 125-வது இடத்தைப் பிடித்துள்ளது. விசா இல்லாமல் பயணம் செய்வது (50%), முதலீட்டு வாய்ப்புகள் (25%), மற்றும் வாழ்க்கைத் தரம் (25%) ஆகிய மூன்று முக்கியக் காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை கணக்கிடப்படுகிறது
இந்தச் சர்வதேசப் பாஸ்போர்ட் குறியீடு ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டின் ஒட்டுமொத்த மதிப்பை மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் கணக்கிடுகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டின் ஒட்டுமொத்தத் தரவரிசையில் 124-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஒரு இடம் பின்வாங்கி 125-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பட்டியலில் நமக்கு முன்னதாக நமீபியா 124-வது இடத்திலும், நமக்கு அடுத்ததாக அஜர்பைஜான் 126-வது இடத்திலும் உள்ளன.
ஒட்டுமொத்தத் தரவரிசையைத் தீர்மானிக்கும் 14 முக்கியக் காரணிகளை உள்ளடக்கிய மூன்று முதன்மைப் பிரிவுகளில் சர்வதேசப் பயணச் சுதந்திரம் மற்றும் செல்லும் நாடுகளின் தரம் ஆகியவற்றைக் கணக்கிடும் இப்பிரிவில் இந்தியா 136-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பூட்டான், நேபாளம், ஜமைக்கா, மக்காவ் உள்ளிட்ட 26 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது வருகைக்கான விசா மூலமாகவோ பயணிக்க முடியும்.
இந்தச் சர்வதேசப் பட்டியலில் 96.05 புள்ளிகளுடன் ஸ்வீடன் முதலிடத்தைப் பிடித்து உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.உலகளாவிய அளவில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் 9 நாடுகள் ஐரோப்பிய நாடுகளாக இருக்கும் வேளையில், ஆசியக் கண்டத்திலிருந்து சிங்கப்பூர் (10-வது இடம்) மட்டுமே இந்த டாப் 10 கௌரவப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நாடாகும். இப்பட்டியலின் இறுதி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்
