மும்பையில் மொகரம் ஊர்வலத்தில் 15 ஆயிரம் பேரை கொல்ல விஷ மாத்திரையை கொடுத்த நபரை கண்டுபிடித்த 2 பெண்கள் நடந்தது என்ன
மும்பையில் மொகரம் ஊர்வலத்தில் 15 ஆயிரம் பேரை கொல்ல விஷ மாத்திரையை கொடுத்த நபரை கண்டுபிடித்த 2 பெண்கள் நடந்தது என்ன
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை டோங்ரியில் இருந்து ரஹ்மத் பாக் வரையில் மத (மொஹரம்) ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது ரேய் ரோடு பகுதியில் உள்ள மயானம் அருகே கூடியிருந்த கூட்டத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, உடல் வலியைக் குறைக்க வலி நிவாரண மாத்திரைகளை ஒருவர் விநியோகித்தார். இதனை கவனித்த இஹ்லாம் ஹமிதி மற்றும் ருக்ஸார் சையத் ஆகிய இரண்டு பெண்கள் இந்த ஊர்வலத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர்கள் அந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரித்தோம்
அந்த மாத்திரைகளை பிரித்து பார்த்தபோது உள்ளே ஒரு கருப்பு நிறப் பொடி இருந்தது. மேலும் அந்த பொடியின் நெடி மாத்திரை மருந்து போல் இல்லாததால் எங்கள் சந்தேகம் அதிகமானது
உடனடியாக அவர் அங்கிருந்து கிளம்ப முயன்றபோது நாங்கள் அவரது சட்டையைப் பிடித்து அவரைத் தடுத்து நிறுத்தினோம். அவர் கையில் ஒரு பெரிய நீல நிறப் பை இருந்தது. அதில் மாத்திரைகள் இருந்தன. . நாங்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் பயாஸ் பிரேம்ஜி என்பதும், அவர் பிபிஏ படித்துள்ளதாகவும் பெயிண்ட் வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் தொடர்புகளைப் பயன்படுத்தி 50 கிலோ சிங்க் பாஸ்பைடு எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் ‘உயிர்க்கொல்லி வேதிப்பொருள் வாங்கி அதனை அடைக்க 30,000 வெற்று மாத்திரை உறைகளையும் (Empty Capsules) வாங்கிகடந்த 15 நாள்களாக மும்பையில் தங்கியிருந்து இந்த நச்சு மாத்திரைகளை அவர் தயாரித்து 15,000 பேரை கொல்ல திட்டமிட்டேன்’ என்று போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் இருந்து 14,900 விஷ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடனடியாக ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இதைப் பற்றி அறிவிப்பு செய்து, இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் அறிவிப்பு செய்து மற்ற தன்னார்வலர்களுடன் இணைந்து அந்த மாத்திரைகளைச் சேகரித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்
ஏற்கனவே இந்த மாத்திரைகளை உட்கொண்ட சல்மான் சையத் உள்ளிட்ட 11 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினர்.
அந்த தன்னார்வலர்களின் துரித நடவடிக்கையால் நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில், வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்த அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
