கோவா கடற்கரை பாறையில் அமர்ந்து 'ரீல்ஸ்' எடுத்த நபர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ
கோவா கடற்கரை பாறையில் அமர்ந்து 'ரீல்ஸ்' எடுத்த நபர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ
கோவா மாநிலத்தின் புகழ்பெற்ற கடற்கரையான பகா கடற்கரையில், பாறையின் மீது அமர்ந்து செல்போனில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர், எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹாஸ் அஷ்பக் மசாலி (33). இவர் நேற்று முன்தினம் கோவா மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார். கோவாவின் பகா கடற்கரைப் பகுதியில் உள்ள ஆபத்தான பாறைகளின் மீது ஏறி அமர்ந்த மசாலி, கடலின் அழகை ரசித்தபடி தனது செல்போனில் புகைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான வீடியோ ரீல்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கடலில் திடீரென எழும்பிய ராட்சத அலையொன்று அவர் அமர்ந்திருந்த பாறையை முழுமையாக மூழ்கடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கடலுக்குள் சுருட்டி இழுத்துச் சென்றது.
இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கடற்கரை பாதுகாப்புப் போலீசாரும், அவசரக்கால மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பல மணி நேரத் தீவிர தேடுதலுக்குப் பிறகு, சஹாஸ் அஷ்பக் மசாலியின் உடல் கடலால் அடித்து வரப்பட்டு அலைகளின் மூலம் கரை ஒதுங்கியது.
கரை ஒதுங்கிய அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவா போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாத் தளங்களில் ஆபத்தான பாறைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் நின்று கொண்டு செல்போன்களில் ஆபத்தான முறையில் புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
33-year-old Sahas Ashpak Masali from Karnataka's Bijapur was washed away by strong currents at Baga Beach in north Goa. The incident happened while he was sitting on a rock near the shoreline when rough sea conditions triggered a series of powerful waves. A search and rescue operation was immediately launched, and his body was recovered later.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2070151780386902032
Tags: தமிழக செய்திகள்
