Breaking News

பஞ்சி ஜம்ப் சாகசத்தில் பாதுகாப்பு கயிற்றைக் கட்ட மறந்த ஊழியர்கள் 40 அடி உயரத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ

அட்மின் மீடியா
0

பிரேசிலில் பாதுகாப்பு கயிறை கட்ட ஊழியர்கள் மறந்ததால் பஞ்சி ஜம்ப் சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண் (24) 40 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.



இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

Video of a young woman tragically falling 40 feet to her death after employees forgot to tie a safety rope during a bungee jump adventure

பிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர் பஞ்சி ஜம்ப் சாகச விளையாட்டில் ஈடுபட அவர் ஆவலோடு முற்பட்டுள்ளார்.

இதற்காக அந்த இளம்பெண் பாலத்தின் உச்சியில் தயாராக நின்றபோது, அங்குப் பணியில் இருந்த சாகச மைய ஊழியர்கள் அவருக்குப் பொருத்த வேண்டிய முக்கியப் பாதுகாப்பு கயிறுகளைச் சரியாகப் பூட்டிப் பொருத்தாமல் மறந்துவிட்ட நிலையில், அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிவரக் கவனிக்காத அந்த இளம்பெண், ஊழியர்கள் சிக்னல் கொடுத்ததும் பாலத்தில் இருந்து தலைகீழாகக் கீழே குதித்துள்ளார்.

அடுத்த வினாடியே, பாதுகாப்பு கயிறு கழன்று கொண்டதால் நிலைதடுமாறிய அந்த இளம்பெண், சுமார் 35 மீட்டர் (சுமார் 115 அடி) உயரத்தில் இருந்து எவ்விதப் பிடிப்பும் இன்றி கீழே விழுந்து தரையில் மோதினார்.

இந்தக் கொடூரமான விபத்தில் அந்த இளம்பெண்ணுக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிர் பிரிந்தது.

நெஞ்சை உறைய வைக்கும் இந்த விபத்தின் நேரடி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது

சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரேசில் நாட்டுப் போலீசார், சாகச விளையாட்டுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேசப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, அந்தச் சாகச மையத்தின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இந்த விபத்திற்குக் காரணமான முக்கிய ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2066038765420970490

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback