Breaking News

3 முறை முயன்று, 4வது முயற்சியில் மலைக்கோட்டையிலிருந்து 400 அடி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வருங்கால கணவரை கொன்ற இளம்பெண்: காதலனுடன் கைது

அட்மின் மீடியா
0

3 முறை முயன்று, 4வது முயற்சியில் மலைக்கோட்டையிலிருந்து 400 அடி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வருங்கால கணவரை கொன்ற இளம்பெண்: காதலனுடன் கைது




மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநருமான கேத்தன் அகர்வால் (26). கடந்த 18ம் தேதி லோககாட் கோட்டைக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். 

கோட்டையைச் சுற்றி பார்த்துகொண்டிருந்தபோது புகைப்படம் எடுத்தோம் அபோது கேதன் கால் வழுக்கி 400 அடி  ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டார்" என்று அவருடன் இருந்த அவரது வருங்கால மனைவி சியா கோயல் கூறினார்

இது தொடர்பாக விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்த லோனவாலா போலீசார், நடத்திய விசாரணையில், கேத்தன் அகர்வால்- சியா கோயலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் நடக்கவிருந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும்  மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. 

விசாரணையின் சியா கோயல் முன்னுக்கு பின் முரனாக வாக்குமூலம் அளித்ததால் போலீசார் அவர் மீது சந்தேகம் கொண்டனர். அதன்பின்பு அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து பள்ளதாக்கில் தள்ளிவிட்டு கொலை செய்ததை ஒப்புகொண்டன்ர்

அவர்கள் இரண்டு பேரும் இக்கொலைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக முயற்சி செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், 

புனேவின் கோண்ட்வாவைச் சேர்ந்த சேத்தன் பாபுலால் சவுத்ரி(22) என்ற நபருடன் சியா கோயல் உறவில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் சியா கோயலுக்கு கேத்தனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றும், சவுத்ரியுடனான காதல் உறவுக்கு கேத்தன் தடையாக இருப்பதாக கருதிய கோயல், அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

முதல் முறை மே 31ம் தேதி கேதனை ஷியா லோஹாகட் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டார். ஆனால் இதில் அவர் புதரை பிடித்துக்கொண்டு தப்பிவிட்டார். இதனால் நிலைமையை சமாளிக்க ஷியா பாம்பு, பாம்பு என்றும், பாம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக தள்ளிவிட்டதாகவும் கூறி தப்பித்துக்கொண்டார். 

இம்மாதம் 4ம் தேதி மீண்டும் கேதனை ஷியா லோஹாகட் கோட்டைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் இம்முறை கேதனை அவரது தாயார் அனுப்பவில்லை.இதனால் இதில் தப்பித்துக்கொண்டார். 

கடந்த 14ம் தேதி மீண்டும் கேதனை லோஹாகட் கோட்டைக்கு ஷியா அழைத்துசென்றார். ஆனால் அன்று கோட்டையை பார்க்க அதிக கூட்டம் வந்திருந்தது. எனவே அன்றைய தினம் ஷியாவால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. 

நான்காவது முயற்சியாக ஷியா தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சாக்குப்போக்கின் கீழ், மீண்டும் லோஹாகட் கோட்டைக்கு செல்லலாம் என்று கேதனை கட்டாயப்படுத்தி கோட்டைக்கு அழைத்து சென்றார்.

கைது செய்யப்பட்ட 2 பேர் மீது கொலை மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவங்களின் துல்லியமான வரிசையை உறுதிப்படுத்தவும், தடயவியல் ஆதாரங்களைச் சேகரிக்கவும், இந்தக் குற்றச் சதியில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback