ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..! முழு விவரம் தெரிந்து கொள்ள Major changes coming into effect from July 1..! Know the full details
ஜூலை 1 ஆம் தேதி முதல், ஆதார் இலவச புதுப்பிப்பு, பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டண உயர்வு, LPG, CNG, PNG விலைகளில் மாற்றம் போன்ற பல முக்கிய அறிவிப்புகள் அமலுக்கு வருகின்றன. Major changes coming into effect from July 1..! Know the full details
ஆதார் புதுப்பிப்பு:
ஜூலை 1 முதல் டிசம்பர் வரை ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என UIDAI அறிவித்துள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை (Email ID) இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்த இலவச சேவை டிசம்பர் 31, 2026 வரை அடுத்த 6 மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும்.இதன் மூலம் மின்னஞ்சல் முகவரியை திருத்தம் செய்யப் பொதுமக்கள் இனி ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை; வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்
ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு
மத்திய அரசின் 'ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு' (இரட்டை இணைப்பு தடை) கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ்:வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் எரிவாயு (PNG) இணைப்பு பெற்றவர்கள், தங்களது எல்.பி.ஜி (LPG) சிலிண்டரை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டண உயர்வு:-
14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண சேவைக்கு ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆகவும்,
தட்கல் சேவைக்கு ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
LPG, CNG, PNG மற்றும் விமான எரிபொருள் விலைகளும் திருத்தப்பட வாய்ப்புள்ளது.
சமையல் எரிவாயு (LPG), சிஎன்ஜி (CNG) மற்றும் பிஎன்ஜி (PNG) ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படலாம்.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையேயான சர்வதேச மோதல்கள் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்து,
தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், ஜூலை மாதத்தில் சிலிண்டர் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிகள்
ஜூலை 1 முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்டு புள்ளிகள் மற்றும் சலுகை விதிகளில் மாற்றம் வரலாம். குறிப்பாக, எஸ்பிஐ கார்டின் சில கார்டுகளுக்கு புதிய விதிகள் அமலாகும் என கூறப்படுகிறது.
இதனால், ரிவார்டு புள்ளிகள் பெறுவதற்கு வரம்பு நிர்ணயிக்கப்படலாம். மேலும், சில வகை செலவுகளுக்கு இனி ரிவார்டு புள்ளிகள் கிடைக்காமல் போகலாம். இது கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி:-
ஜூலை மாதத்தில் EPFO 3.0 தளம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தளம், EPFO சேவைகளை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
EPF கணக்கு வைத்திருப்பவர்கள் UPI மூலம் தங்களின் PF சேமிப்பு பணத்தை உடனடியாக பெறும் வசதி கிடைக்கும். இதன் மூலம் PF பணம் எடுக்கும் நடைமுறை மிகவும் வேகமாகவும் சுலபமாகவும் மாறும்
ரயில் விதிமீறல்களுக்கான அபராதம் உயர்வு!
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் அபராத கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.
வருமான வரி
ஜூலை மாதத்தில் தங்களது வருமான வரிக் கணக்குகளை (ITR) தாக்கல் செய்பவர்களுக்கு,
ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு, 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2026 ஆகும்.
இதற்கிடையில், வரி தணிக்கைக்கு உட்படாத ITR-3 மற்றும் ITR-4 படிவங்களைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர், ஆகஸ்ட் 31, 2026 வரை தங்கள் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். காலக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.
ரயில்வே அபராதம் உயர்வு:-
மின்சார ரயில்கள்:
புறநகர் மின்சார ரயில்களில் ரூ. 10 பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்தால் விதிக்கப்பட்ட ரூ. 250 அபராதம், தற்போது ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விரைவு ரயில்கள்:
எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ. 600 மதிப்பிலான டிக்கெட் இன்றி பயணிப்போருக்கான அபராதம் இருமடங்காகக் கூட்டப்பட்டு, ரூ. 1,620 வரை வசூலிக்கப்படுகிறது.
பெண்கள் பெட்டி:
பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணிக்கும் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட ரூ. 500 அபராதம், இனி ரூ. 2,500 ஆக வசூலிக்கப்படும்.
புகைபிடித்தல்:
ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்களில் புகைபிடித்தால் விதிக்கப்படும் அபராதம் ரூ. 100-லிருந்து ரூ. 2,000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்


