4 ஆண்டுகளாக தபால்களை டெலவரி செய்யாமல் வீட்டில் பதுக்கிய தபால்காரர் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 7 மூட்டை கடிதங்கள் நடந்தது என்ன
4 ஆண்டுகளாக தபால்களை டெலவரி செய்யாமல் வீட்டில் பதுக்கிய தபால்காரர் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 7 மூட்டை கடிதங்கள் நடந்தது என்ன
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த போஸ்ட்மேன் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய கடிதங்கள் மற்றும் தபால்களை டெலிவரி செய்யாமல் நீண்ட நாட்களாகத் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் தபால் சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் தபால் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்திருக்கிறார்கள்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட தபால்துறை அதிகாரிகள், அஞ்சல்காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் முறையாக தபால்களை விநியோகம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
சந்தேகமடைந்த அஞ்சல்துறை அதிகாரிகள் செந்தில்குமார் வீட்டிற்குச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குச் சென்று சேரவேண்டிய தபால்களை விநியோகம் செய்யாமல் மூட்டை மூட்டையாக வீட்டில் குவித்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்
இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தபால் துறை அதிகாரிகள் திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் , போஸ்ட்மேன் செந்தில்குமார் வீட்டில் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்த 7 மூட்டை தபால்களை அதிரடியாக மீட்டனர்.
இந்தநிலையில், தனது வீட்டில் 7 மூட்டை கடிதங்களை பதுக்கி வைத்து இருந்த தபால்காரர் தபால்காரர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும், வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தபால்கள் விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தபால்துறை அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
