Breaking News

வைரல் ஆகும் வீடியோவில் போதைப்பொருள் இல்ல... குழந்தைக்காக மாத்திரையை தூளாக்கினேன் - அமைச்சர் சரத்குமார் விளக்கம்..!

அட்மின் மீடியா
0

வைரல் ஆகும் வீடியோவில் போதைப்பொருள் இல்ல... குழந்தைக்காக மாத்திரையை தூளாக்கினேன் - அமைச்சர் சரத்குமார் விளக்கம்..!



சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது, தற்போது மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள சரத்குமார், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் தற்போதைய தவெக அமைச்சர் சரத்குமார், மாத்திரை ஒன்றை தூளாக்கி, அதை ஏடிஎம் அட்டை மூலம் சீராக ஒதுக்குவது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவையே பலரும் பகிர்ந்து, அது போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடையது என கூறி தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில், "அது போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கு கொடுப்பதற்காக மாத்திரையை தூளாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ" என சர்ச்சைக்கு விளக்கம் அளித்து அமைச்சர் சரத்குமார் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, 

 2 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஐபிஎல் மேட்ச் பார்க்க போயிருந்தோம். அங்கு வந்திருந்த நண்பரின் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் என் மனைவி மாத்திரையை பொடியாக்கி கொடுக்க சொன்னார். அதற்காக தண்ணியில கலந்து கொடுக்குறதுக்காக மாத்திரைய உடைச்ச வீடியோ தான் அது... அவ்ளோ போலீஸ், அவ்வளவு கூட்டம் இருக்குற ஐ.பி.எல் நடக்குற இடத்துல அப்படி யாராவது பண்ண முடியுமா? அது போதைப்பொருள் என தப்பான வதந்திய பரப்பிக்கிட்டு இருக்காங்க.. ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.. 

இதுமாதிரிலாம் இனி செய்யாதீங்க! இதுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது எங்க கடமை” என்றார்.

மேலும், இதுகுறித்து அமைச்சர் சரத்குமாரின் மனைவி ராதிகா கூறுகையில், "தற்போது தவறான புரிதலோடு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதற்கு உரிய விளக்கம் அளிப்பது எங்களது கடமை. ஆகையால், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டின்போது அவ்வளவு காவல்துறை பாதுகாப்பு இருந்தது. பொதுமக்களும் அங்கே அதிகம் இருந்தனர். இதுபோன்ற சூழலில் எப்படி போதைப்பொருள் பயன்படுத்த முடியும்?" என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback