Breaking News

சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் எந்த எந்த ஆவணங்கள் பத்திரபதிவு செய்லாம் எப்படி செய்வது முழு விபரம் How to register any documents without going to the Registrar's office, full details

அட்மின் மீடியா
0

சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் எந்த எந்த ஆவணங்கள் பத்திரபதிவு செய்லாம் எப்படி செய்வது முழு விபரம் How to register any documents without going to the Registrar's office, full details



தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறையில் பொதுமக்களின் வசதிக்காகக் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வருகை இல்லா ஆவணப் பதிவு முறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான புதிய விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு முறைப்படி வெளியிட்டுள்ளது.

புதிய நடைமுறையின்படி பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லாமல் தங்களின் இருப்பிடத்தில் இருந்தபடியே ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணைய தளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்த எளிய இணையவழி திட்டத்தின் கீழ் முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் ஆகியவற்றை எளிதாகப் பதிவு செய்ய முடியும். 

மேலும் வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்களையும் இந்த புதிய இணையதளப் பதிவு முறையைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் வீடுகளில் இருந்தே சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்களின் ஆவணப் பதிவு வேலைகளை எவ்வித அலைச்சலும் இன்றி மிக விரைவாகச் செய்து முடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration) என்ற நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்:

 முதல் விற்பனை மனை (First sale of Plot) 

முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat) 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் 

வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள்

பதிவு செய்வது எப்படி

பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள் நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை (ரசீது) இணைய வழியில் சமர்ப்பிக்கலாம். 

ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதி பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யவேண்டும். 

ஆதார் ஆவணத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரி பார்க்கப்பட வேண்டும். 

சந்தேகங்களுக்கு 7397574067, 9940446694, 6369798973, 8525805957 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback