ஜூலை 31 முதல் கோழி இறைச்சிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஜூலை 31 முதல் கோழி இறைச்சிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்
தீவனக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தக்கோரி கோழி இறைச்சிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு.
தமிழகம் மற்றும் புச்சேரியில் ஜூலை 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம் செய்யப்படும்; 70,000 கடைகள் அடைக்கப்படும்.
- கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
தஞ்சாவூரில் அந்த கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கறி கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி, நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும்.
கறி கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை, கோழி உற்பத்தியாளர்கள் கடை பிடிக்க வேண்டும். இதனால் கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதால், அந்த கோழிகள் எடை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கோழிகளில் உடலில் தீவனங்கள் தங்கி ஜூரனம் ஆவதில்லை. இதனால் அதன் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி
கோழி இறைச்சி கடைகளை வருகின்ற 31ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.