தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி புனிதப் பயணம் சென்ற 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி புனிதப் பயணம் சென்ற 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி
தாய்லாந்தில் ஜூலை 2 அன்று நடந்த சோக விபத்தில், குடும்ப வாகனத்தை பெற்றோரின் அனுமதியின்றி இயக்கிய 11 வயது சிறுவன் மோதியதில் புனிதப் பயணம் மேற்கொண்ட 8 பௌத்த துறவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முக்தாஹன் (Mukdahan) மாகாணத்தில் இருந்து உபோன் ரட்சாதணி மாகாணம் நோக்கி 34 பௌத்த துறவிகள் மற்றும் 5 பக்தர்கள் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பிக்-அப் வாகனம் துறவிகள் மீது மோதியது.
இந்த விபத்தில் 5 துறவிகள் சம்பவ இடத்திலும், 3 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Rudhrayadav001/status/2073045176738807909
Tags: அரசியல் செய்திகள்
