கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றது திமுக..!
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றது திமுக..!
கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். கரூர் சம்பவத்திற்கு கடந்த திமுக அரசே காரணம் என அவர் பேசியிருந்தார். அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.மேலும் கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பேச தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
மேலும் வரும் ஜூலை 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அரசு ஆணைகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ``குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாகவும், ஊடகங்களில் தொடர்ந்து பேசி வருவதாகவும் வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிதி விஸ்வநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். "முதலமைச்சரின் பேச்சையும், செய்திகளையும் உச்ச நீதிமன்றம் தான் கட்டுப்படுத்த வேண்டுமா? நீங்கள் பேச்சுரிமைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்களா?
அரசியல் எதிரிகளின் கருத்துக்களுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் வழங்குவது எப்படி வழக்கை பாதிக்கும் என்றும், இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் எஃப்.ஐ.ஆரில் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
உச்ச நீதிமன்றத்தை ஓர் அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் .
நீதிமன்றத்தின் இந்த கடுமையான அணுகுமுறையை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் முற்பட்டனர். இதனால் திமுக தரப்பு வழக்கறிஞர், மனுவை வேறு சட்ட வழிமுறைகள் மூலம் அணுக அனுமதி பெற்று, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், திமுகவின் மனுவை "திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி" தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் தலையிடும் விதமாக பேசி வருவதாகவும், எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக கோரிக்கை வைத்தது.advertisementதொடர்புடைய செய்திஇபிஎஸ்ஸின் வழக்கத்திற்கு மாறான மௌனம்... தவெகவை எதிர்க்க அதிமுகவின் 'மெகா பிளான்' - ஒர்க்அவுட் ஆகுமா?மகன் வயது பெண்ணை மணந்த தமிழ் பட வில்லன்... 4வது மனைவியாக... ஏமாந்த பிரபல நடிகை!“திமுகவில் சேர்ந்துவிட ரூ. 100 கோடி பேரம் பேசினார்கள்…” – எம்.எல்.ஏ. விஜி சரவணன் பகீர் குற்றச்சாட்டு4 பாமக எம்எல்ஏக்கள் உடன் அமைச்சர் ஆனந்தை சந்தித்த அன்புமணி ராமதாஸ்விடுமுறை அமர்வு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, சீல் நாகு ஆகியோர் அமர்வில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதனை ஏற்று இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
Tags: இந்திய செய்திகள்
