பிரபல பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி காலமானார் RIP SJanaki
அட்மின் மீடியா
0
மைசூருவில் பிரபல பின்னணிப்
பாடகி எஸ்.ஜானகி (88) காலமானார்
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.
நான்கு முறை தேசிய விருது பெற்ற இவர் "ஜானகியம்மா" என்று மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்,
மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த, பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர்.
1957-ஆம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்துடன் துவங்கி, இவரது இசை வாழ்க்கை ஆறு தலைமுறைகளை கண்டுள்ளது.
தென்னிந்தியாவின் "இசையரசி" என்று அழைக்கப்படும் ஜானகியம்மாள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருடனான இவரது கூட்டணி அதிகம் பேசப்படுகிறது.
1960, 1970, 1980களில் பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் பாடினார்.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார். மைசூருவில் உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரை உலகினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.