Breaking News

தெலங்கானாவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்து 6 பேரைக் கொடூரமாகக் கொன்ற நபர் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தெலங்கானாவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 6 பேரைக் கொடூரமாகக் கொன்ற நபர் நடந்தது என்ன முழு விவரம்



ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம், ஷாபாத் பகுதியில் ராஜ்குமாரின் மனைவி, இரண்டு மகன்கள், மற்றும் அவர் மீது போக்சோ வழக்குத் தொடர்ந்த 16 வயது சிறுமி, அப்பெண்ணின் தாய் மற்றும் பாட்டி யை கொடூரமாக கொன்றுள்ளார்

கடந்த மே மாதம் ராஜ்குமார் மீது சிறுமி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார். அதனால் சிறை சென்ற அவர், ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே பழிவாங்கியுள்ளார் தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தெலங்​கானா மாநிலம், ரங்​காரெட்டி ஷாபாத் அருகே வசிக்​கும் மைனர் பெண் (17) ஒரு​வருக்​கு, தெய்​வாலகூடா பகு​தி​யைச் சேர்ந்த ராஜ்கு​மார் (38) என்​பவர், பாலியல் தொல்லை கொடுத்​துள்ளார். அதன் அடிப்​படை​யில், போலீ​ஸார் விசா​ரணை நடத்தி கடந்த மே மாதம் ராஜ்கு​மாரை போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்

இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை ஜாமீனில் ராஜ்கு​மார் வெளியே வந்த இரவே தன் மீது புகார் அளித்த மைனர் பெண்​ணின் வீட்​டுக்கு சென்​று, அந்தப் பெண்​ணின் தாய் லட்​சுமி​, பாட்டி ருக்​கம்​மாவை​ சரமாரி​யாகக் கத்​தி​யால் வெட்​டி​னார். பின்​னர் அந்த மைனர் பெண்ணை அகில் சாகர் ஏரிக்​கரை அருகே கொண்டு சென்று அவரை​யும் படு​கொலை செய்​துள்​ளார்.

அதன் பின்​னர், நேராக தனது வீட்​டுக்கு சென்ற ராஜ்கு​மார், அங்​கிருந்த தனது மனைவி சரிதா (33), மகன்​கள் பரிக் ஷித் (4), தைவீக் ஷி (2) ஆகிய மூவரை​யும் கத்​தி​யால் சரமாரி​யாக வெட்​டிக் கொலை செய்​துவிட்டு தலைமறைவாக உள்ளார்.

6 கொலைகளை செய்த ராஜ்குமாரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஷாபாத் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் சிறுமியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிறுமியையும் அவரது தாயாரையும் துன்புறுத்துவதாக மிரட்டிய குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தும், காவல் துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

A POCSO accused allegedly killed a teenage girl, her mother and grandmother before returning home and murdering his wife and two young sons in Telangana. Police have launched a manhunt as the accused remains absconding.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback