Breaking News

முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது

அட்மின் மீடியா
0

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது 

முதலமைச்சரை மிரட்டும் வகையில் பேசியதாக, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 351 (3), 352, 353 (2) BNS ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்

கோவில்பட்டி தி.மு.க. கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர்உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்... சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய்... சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம் என்று முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினார்

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியது என்ன வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/TheEagle3_0/status/2078818384188518722

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback