வாட்ஸ் ஆப்பில் இனி மொபைல் நம்பர் வேண்டாம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டெலகிராம் போல் Username வசதி அறிமுகம் WhatsApp username feature
ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டெலகிராம் போல் வாட்ஸ்அப் செயலியில் Username வசதி அறிமுகம்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளவாட்ஸ் ஆப் பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன.
வாட்ஸ்அப் செயலியில் Username அம்சம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது.
இந்நிலையில் புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது.
வழக்கமாக பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணை பயன்படுத்தாமல் இனி இந்த யூசர்-நேமை (Username) பயன்படுத்தலாம். இனி எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனர்கள் அவர்கள் விரும்பும் தனி பயனர் பெயர்களை கொண்டு தங்களை தனித்து அடையாளம் காண்பித்துக் கொள்ளலாம்.இதேபோன்ற அம்சத்தை அடிப்படையாக கொண்டு டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் ப்ரோஃபைல் ஆப்ஷன்சென்று மார்றி கொள்ளலாம் WABetaInfo ஆல் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட், யூசர்நேம் அம்சத்தை பயன்பாட்டின் அமைப்புகள் மெனு மூலம் அணுக முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.
வாட்ஸ் அப் யூசர்-நேம் கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காணலாம்.
யூசர்நேம்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் தனித்துவத்தையும், பயனரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி பயனர்கள் அவர்களுடைய மொபைல் எண்களை வெளிப்படுத்தாமல் மெசேஜ் (WhatsApp Message) செய்துகொள்ளலாம்.
தற்போது முன்பதிவு (மட்டும்) தொடங்கி விட்டது.உங்கள் மொபைலில் வாட்ஸப் எண்ணை எந்த மொபைல் போனில் முதன்மையாகத் தரவிறக்கிப் பயன்படுத்துகிறீர்களோ அதில் வாட்ஸப் அப்டேட் ஆகியுள்ளதா என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் பார்த்துக் கொள்ளவும்.
Settings --> Account என்ற பக்கத்திற்குச் செயலியில் சென்றால் Your Account என்ற பகுதியில் User Name என்று வரும். அதில் உங்களுக்குத் தேவையான பயனர் பெயரை உள்ளிட்டால் அது இருக்கிறதா, இல்லையா என்று சரிபார்த்து இருந்தால் அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும். இப்போதைக்கு யாரும் அந்தப் பயனர் பெயரில் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாது. ஏனென்றால் இப்போது முன்பதிவு மட்டுமே செய்யத் தொடங்கியுள்ளனர்.
வாட்ஸப் பயனர் பெயர் உபயோகத்தை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தத் தொடங்கும் போது நீங்கள் முன்பதிவு செய்து வைத்துள்ள பெயர் உங்களுக்குக் கிடைக்கும். தேவை இல்லையென்றால் இதை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம்.
ஏற்கனவே ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்றவற்றில் உள்ள பயனர் பெயரையே உபயோகிக்க விரும்புகிறவர்களுக்கு அதே பயனர் பெயர்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
தற்போது வரை வாட்ஸ்அப்பில் ஒருவருடன் புதியதாகத் தொடர்புகொள்ள வேண்டுமெனில், நமது அலைபேசி எண்ணை அவர்களிடம் பகிர்வது கட்டாயமாக உள்ளது. இதனால் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பாதிக்கப்படுவதாக எழுந்த கோரிக்கைகளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகிறது.வாட்ஸ் அப்இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் செயலிகளைப் போலவே, இனி வாட்ஸ்அப்பிலும் ஒவ்வொரு பயனரும் தங்களுக்கெனத் தனித்துவமான 'யூசர்நேம்' ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.
மற்றவர்களுடன் பேச இந்த யூசர்நேமை மட்டும் பகிர்ந்தால் போதுமானது; மொபைல் எண் ரகசியமாக வைக்கப்படும்.இந்த புதிய வசதிக்கான முதற்கட்ட முன்பதிவுகள் மற்றும் பீட்டா சோதனைப் பணிகள் தற்பொழுது ஏற்கனவே தொடங்கிவிட்டன.
பயனர்கள் தாங்கள் விரும்பும் யூசர்நேமை அமைத்துக் கொள்ளவும், அதனைத் தங்களின் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கவோ அல்லது முற்றிலும் நீக்கவோ முடியும் என்ற நெகிழ்வுத்தன்மையை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்

