Breaking News

எதற்காகப் ராஜினாமா செய்தோம், தவெகவில் இணைந்தது ஏன் மரகதம் குமரவேல் பரபரப்பு பேட்டி!

அட்மின் மீடியா
0

எதற்காகப் ராஜினாமா செய்தோம், தவெகவில் இணைந்தது ஏன் மரகதம் குமரவேல் பரபரப்பு பேட்டி!




அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் நேற்று ராஜினாமா செய்தனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து த.வெ.க.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்று 3 பேரும் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள்  அளித்த பேட்டியின்போது, 

நாங்கள் பதவி விலகியது ஏன்? என மக்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளோம். ராஜினாமா என்ற இந்த முடிவு சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் தி.மு.க.வின் ஆதரவுடன் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். ஆனால், அந்த நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. 

சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தோம். தொகுதி மக்களின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கையை முன்வைத்து இந்த நிலைப்பாட்டை முன்வைத்தோம்.

ஆனால், அ.தி.மு.க.வுக்கு பழனிசாமி துரோகம் செய்து விட்டார். எங்களை பற்றி அவதூறு பரப்பினார்கள். கடந்த 2021-ம் ஆண்டில் எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்போது, மக்களுக்கு எங்களால் எந்த நல்ல விசயமும் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போதும் அது நீடித்தது. மக்களுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அதனால், தொகுதி மக்களின் விருப்பத்திற்காகவே த.வெ.க. அரசை ஆதரிக்க முடிவு எடுத்தோம்.

தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ராஜினாமா செய்தோம். முழு மனதுடன் த.வெ.க.வில் எங்களை இணைத்து கொண்டோம் என்றார். முதல்-அமைச்சர் விஜய் நல்ல ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback