Breaking News

வேலுமணி தரப்பு அதிமுக MLA-க்கள் 3 ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்

அட்மின் மீடியா
0
வேலுமணி தரப்பு அதிமுக MLA-க்கள் 3 ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்



அதிமுக MLA-க்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமாசெய்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆவார்.மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

ராஜினாமா கடிதம் அளித்த கையோடு தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று, வெறும் 21 நாட்களில் ராஜினாமா செய்துள்ள மூவரும் மற்றொரு கட்சியில் உடனே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் 22 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில் சிவி சண்முகம் ஆதரவு 4 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்

இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது இதனை அடுத்து சிவி சண்முகம் தரப்பு ஆதரவு எம் எல் ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது

தற்போது திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து 4 க்கு தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளது

சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும் முறைப்படி ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இன்று மாலைக்குள் ஆய்வு செய்து ராஜினாமா ஏற்பு குறித்து அறிவிக்கப்படும் என -சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback